Small napier என்கிற குட்டை நேப்பியர் புல் விற்பனைக்கு!.
குட்டை நேப்பியர் என்கிற Small napier புல்லின் சிறப்பம்சங்கள்:
இந்தியாவிலேயே அதிக புரதச்சத்து உள்ள நேப்பியர் புல் இனம். புரதச்சத்தின் அளவு 20% முதல் 25%.
மிக அதிக இனிப்பு சுவை உள்ள, "இனிப்பு புல்".
குட்டை வகையில் விரைவாக வளர்ந்து, குறுகிய காலத்தில் அதிக மகசூல் கிடைக்கும். ஆண்டுக்கு 60-70 டன்கள்.
மிக மிக அதிக இலை, தண்டு விகிதம்.
இலை மிருதுவாக இருக்கும், சுணை குறைவு. மரத்தின் இலைகள் போல் மிருதுவாக இருக்கும்.
குறிப்பாக கோழி இனங்களுக்கு என்று இதுவரை அதிக புரதச்சத்து , மகசூல் கொண்ட மிகச்சிறந்த புல் இதுவே ..
இதன் மூலம் கோழிவளர்ப்பில் நாம் தானியங்களையும், நிறுவனங்களின் மூட்டை தீவனங்களையும் மிக அதிக செலவு செய்து லாபம் அற்ற தொழிலாக செய்து வந்துகொண்டு இருக்கிறோம். அதை மாற்ற ஒரு முயற்சியாகும்.
இப்புல் மூலம் நம் நிலத்தில் நல்ல இயற்கையான முறையில், எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல், பசுமையான தீவனத்தை மிகக்குறைந்த செலவில் மேற்கொண்டு நல்ல தரமான கோழி இனங்களை வளர்க்கலாம்.
இதன் மூலம் தற்போது கறிக் கோழிகள் உண்பது மிகப்பெரிய நோய்களுக்கான மூலமாக இருப்பதை தடுத்து நல்ல தரமான, ருசியான, இயற்கையான கறியை மக்களுக்கு வழங்கலாம்.
தீவன மற்றும் பராமரிப்பு செலவீனங்களை சுமார் 40%-60% வரை குறைத்து, இத்தொகையை லாபமாக ஈட்டலாம்.