சூப்பர் நேப்பியர் புல்லின் சிறப்பம்சங்கள்:
- பால் கரவை 20% முதல் 30% அதிகரிக்கும். அதாவது 10 லிட்டர் கரவையில் உள்ள மாடு 12 முதல் 13 லிட்டராக அதிகரிக்கும்.
- இதில் கவனிக்க வேண்டியது, மேலும் கூடுதல் செலவுகள் இல்லாமல்.
- சிறப்பு சலுகை போக்குவரத்து செலவில் 50% தள்ளுபடி.
- முதல்தரமான, அதிக முளைப்பு திறனுடைய சூப்பர் நேப்பியர் கரனைகள்.இரண்டாம் தரம், மூன்றாம் தர கரனைகளை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்வதால், அதனை வாங்கி விவசாயம் செய்யும் போது முளைப்பு குறைவாகி மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தி, முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடுகிறது, ஆகையால் எச்சரிக்கையாக இருக்கவும். மேலும் சில தவறான ஆட்கள் போலியான கரனைகளை விற்பனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
- தமிழகம் முழுவதும் அனுப்புவதற்கு ஆகும் லாரி வாடகையில் பாதி செலவை நாங்கள் செலுத்துகிறோம். மேலும், வேறு மறைமுக செலவுகள் ஏதும் இல்லை. கரனையை வெட்டுவதற்கு ஆட்கள் கூலி,சாக்கு செலவு, லாரி ஆலுவலகம் கொண்டுவந்து பதிவு செய்ய ஆகும் கூலி என அனைத்து செலவுகளும் 95 பைசாவுக்குள் முடித்து, பதிவு செய்தவுடன் உடனடியாக அனுப்புகிறோம்.
- முழுமையான வழிகாட்டுதலும் வழங்குகிறோம். அதாவது சூப்பர் நேப்பியரை எவ்வாறு விவசாயம் செய்வது, அறுவடை செய்வது, தீவனமாக வழங்குவது வரை வழிகாட்டுகிறோம்.
- இன்னும் சில வாரங்கள் கழித்து நடவுசெய்யவுள்ள நண்பர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
- கால்நடை வளர்ப்பில் தீவன செலவை குறைக்க மிகப்பெரிய வழி, சூப்பர் நேப்பியர் புல்லை விவசாயம் செய்து கால்நடைகளுக்கு வழங்குவது. இதன் மூலம் மிக அதிக புரதச்சத்து 14% - 18% வரையும், 180-200 டன் பசும் தீவனம் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் கிடைக்கும்,
- இதனால் நமது கால்நடை பண்ணையில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் கீழே!
- ஏக்கருக்கு 100 டன் என இரண்டு ஏக்கரில் 200 டன் விளையும் ஏனைய புல்கள். ஆனால் சூப்பர் நேப்பியர் ஒரு ஏக்கரில்180 முதல் 200 வரை டன் மகசூல் கிடைக்கும். ஆகையால் நமக்கு ஒரு ஏக்கருக்கான அனைத்து செலவுகளும் மிச்சமாகும். இதனால் ஒரு ஆண்டில் நமக்கு மிகப்பெரிய அளவில் பணம் மிச்சமாகும்.
- அதிக பால் அளவு (கரவையில் 20% முதல் 30 வரை அதிகரிக்கும்)
- கால்நடைகள் சத்து பற்றாக்குறை அற்ற நல்ல விரைவான வளர்ச்சி, மருத்துவ செலவுகள் குறைவது.
- அடர் தீவன செலவுகளை குறிப்பிட்ட அளவுக்கு குறைப்பதால், செலவு குறைவதுடன், இயற்கையான, செலவு குறைவான , சத்தான , துய்மையான தீவனத்தை நமது நிலத்திலேயே விவசாயம் செய்து கொடுக்கலாம்.
- அதிக இனிப்பு சுவை காரணமாக கால்நடை சப்பிட்ட பின் எளிதாகவும் ,விரைவாகவும் செரிமானம் ஆகிறது. கழிவுகள் மிகக்குறைவு.
- சைலேஜ் முறையில் பதப்படுத்த மிக ஏற்ற புல் ரகம்.
இது போல பல சிறப்புகள் அடங்கிய இப்புல்லை நம் விவசாயிகள் விரைவாக நடவு செய்து. அதிக லாபம் ஈட்டலாம்.
தற்போது கால்நடை பண்ணை தொழில் அதிக லாபம் குறைவான (அ) லாப இல்லாத தொழிலாகத்தான் உள்ளது. இதை மாற்ற ஒரு சிறு முயற்சித்தான் இப்புல், ஆகவே இதன் அடிப்படையில் இந்த பசும் தீவனத்திற்கு மாறி நல்ல தரமான கால்நடைகளை வளர்த்து தங்கள் வாழ்வில் வளத்தை சேருங்கள். நன்றி.
குறிப்பு:ஒரு ஏக்கருக்கு சுமார் 10,000 முதல் 12000 கரனைகள் தேவைப்படும்.
ஒரு ஏக்கர் ஏனைய பசுந்தீவனத்துடன் சூப்பர் நேப்பியர் விவசாயம் செய்து நிச்சயமாக 15 மாடுகளும், 40 ஆடுகளும் பராமரிக்க முடியம்.
சாகுபடி முறை